நாட்கள் ஏங்கும்
தோள்கள் தாங்கும்
தனதென நினைக்கும்
வரமென புகழும்
உளரல் கவிதையாகும்
உரசல் நிலைக்கும்
தேடல் விடைதரும்
வெட்கம் விடைபெறும்
வியர்வை மணக்கும்
வசைகளும் இனிக்கும்
வேலை கசக்கும்
கெஞ்சப் பழகும்
கைகள் மூன்றாகும்
வெற்றியை உணரும்
நிறைகள் காணும்
மதிப்புக் கூடும்
சுற்றம் தெரியாது
தோழமை தொல்லையாகும்
வீதிக்கு உடன்பிறப்பாகும்
அத்தையைப் பிடிக்கும்
-ஆரன் 14.06.2021
0 comments:
Post a Comment