இருள்கண்டம் தொற்றி
வினையாய் நிலைத்து
வளி வழியெல்லாம்
கிருமியின் வேகம்
கண்டத்தைத் தாண்டி
பல்கிப் பெருகி
மேனி சீர்கெட
மேவுடல் தகித்து
உள்ளே வெம்பி
பனிச்சளி ஒழுகி
ஆதியில் இருந்த
வாசனை இழந்து
நதிநீர் கூட
தன்சுவை தொலைந்து
அறிகுறி எல்லாம்
நிரூபணம் ஆச்சு
நச்சுக் கிருமி
முற்றுதல் கண்டே
உறவுக் கோள்கள்
இடைவெளி கொள்ள
ஓசோன் கவச
ஓட்டையில் சென்று
வீரியக் கிருமி
விரைவாய் பரவ
இல்லாள் வெண்மதி
நேற்றே வீழ்ந்தாள்
செவ்வாய் தங்கை
சீர் கெடுவாளோ
தமயன் வியாழா
விரைவாய் விழித்திடு
மா மருந்தில்லை
கிருமியைக் கொல்ல
அன்னை ஞாயிறே
சேய்நிலைக் கருதி
சில நொடியேனும்
அருகே நில்லு
மனிதக்கிருமிகள்
மரித்துப்போக…
-ஆரன் 03.06.2021
0 comments:
Post a Comment